தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழகத்தில் 3 புதிய சுங்கச் சாவடிகளை அமைக்கவுள்ளது. இவை விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்களம், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டியில் அமைக்கப்பட உள்ளது.
கரியமங்களம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான ஒருமுறை கட்டணமாக ரூ. 55 முதல் ரூ. 370 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நங்கிளி கொண்டான் மற்றும் நாகம்பட்டி சுங்கச்சாவடிகளில் ஒருமுறை சென்றுவர ரூ. 60 முதல் ரூ. 400 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் இந்த பகுதிகளில் சுங்கச்சாவடி கட்டணங்களை கட்டி நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேண்டியுள்ளது.
Leave a Reply