மக்களவை தேர்தல் 5-ஆம் கட்டமாக உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று (மே 20) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
ஐந்தாம் கட்டமாக தோ்தல் நடைபெற்று வருகிறது.இதுவரை நடந்து முடிந்த நான்கு கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் முடிந்துள்ளது.ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
You May Like
-
2 months ago
மும்பை தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு…
-
6 months ago
வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் முன்னிலை!
-
6 months ago
4ஆம் கட்ட மக்களவை தேர்தல்;67% வாக்குப் பதிவு
-
8 months ago
ஏர் இந்தியா 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது