இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு ‘(NEET-UG) நாடு முழுவதும் 557 நகரங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. பிகாரில் இத்தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடா்பாக மாநிலக் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதுகுறித்து, மேலும் 6 பேரை பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீட் தேர்வு வினாதாள் கசிவு விவகாரத்தில் ,தேர்வு எழுதிய பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த மாணவர் அனுராக்(22) ,அரசுத் துறையில் உதவித் பொறியாளராக இருக்கும் தனது உறவினர் மூலம் நீட் தேர்வுத் தாள்களை முறைகேடாகப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
You May Like
-
6 months ago
டெல்லியில் பலத்த பாதுகாப்பு….
-
8 months ago
ஏர் இந்தியா 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது
-
9 months ago
கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய், கோபி மன்சூரியனுக்கு தடை