Thursday, February 13

மும்பை தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு…

மும்பை செம்பூர் பகுதியில் சித்தார்த் காலனியில் இன்று (அக். 6) அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு அடுக்கு கட்டடத்தின் கீழ்தளத்தில் இருந்த கடையில் மின் கசிவு காரணமாக தீப்பற்றி, மேல்தளத்தில் வசித்து வந்தவர்களுக்கும் தீ பரவியது.

தீ விபத்தில் பாரிஸ் குப்தா (7), நரேந்திர குப்தா (10), விதி சேதிராம் குப்தா (15) ஆகிய சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைமேற்கொண்டனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடும் போராட்டத்திற்குப் பிறகு, காலை 9.30 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. காவல்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  பிபவ் குமார்,மாலிவால்  விவகாரம் :போலீசார் விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *