Wednesday, October 29

பைக், கார் ஓட்டுநர்கள் கவனத்திற்கு! கலர் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

டெல்லி: வாகனங்களில் எரிபொருளின் வகையை வெளிப்படுத்தும் வண்ண ஸ்டிக்கர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

2012-13 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு பதிவுத் தகட்டுகளின் (HSRP) ஒரு பகுதியாக இந்த வண்ண ஸ்டிக்கர்கள் இடம்பெறுகின்றன. 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் இவை கட்டாயமாக்கப்பட்டன.

ஸ்டிக்கர் இல்லையெனில்:

  • மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 192(1)ன் கீழ் ரூ.5,000 அபராதம்
  • மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUCC) வழங்கப்படாது
  • போக்குவரத்து துறையினர் நேரடி கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடத்துவார்கள்

எந்த எரிபொருளுக்கு என்ன நிறம்?

புதிய மற்றும் பழைய வாகனங்கள் இரண்டும் இத்துடன் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அதிகாரிகள் எந்த வகை எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஒரு பார்வையில் அறிந்து நடவடிக்கை எடுக்கலாம் என்பதே இதன் நோக்கம்.

வாகன உரிமையாளர்கள் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எதிர்பார்க்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  மக்களவைத் தோ்தலில் களம் காணும் பெரிய கட்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *