வங்கதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற வன்முறைகளின் பின்னணியில், முக்கியக் குற்றவாளியாகக் ஒரு வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளின் காரணமாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்காக இது குறிப்பிடப்படுகிறது.
மொகம்மதுபூரில் கடை நடத்தி வந்த அபூ சையத் என்பவர், கடந்த ஜூலை 19-ஆம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவருடைய ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply