தொடுவானம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி…

WhatsApp Image 2024 09 06 at 7.00.17 PM - தொடுவானம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி...

கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான “தொடுவானம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார் ( கோவை), ஈஸ்வரசாமி ( பொள்ளாச்சி), மேயர் ரங்கநாயகி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாதிரி திராவிடர் நலத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 09 06 at 7.00.18 PM 1 - தொடுவானம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி...

நிகழ்ச்சியில் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், திராவிடம் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மக்கள் ஏன் திராவிட கட்சிகளுக்கு முக்கியம் கொடுக்கின்றார்கள் என்றால் கடந்து வந்த பாதை முக்கியமானது என தெரிவித்த ராஜ்குமார், தனிமனித சுதந்திரம் முக்கியமானது, எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் இருப்பது தான் முக்கியம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், சாதியை வைத்து பிரித்து ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள். அதை உடைத்தது திராவிடம் தான்.மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் பெரியார் சொல்லி விட்டு சென்றுள்ளார். அதன் வழியில் வருவது தான் திராவிடம் என கூறினார். ஐ. ஏ.எஸ் , ஐ.பி.எஸ் மட்டுமின்றி நிறைய படிப்புகள் , வாய்ப்புகள் உள்ளது. அதையெல்லாம் தெரிந்து கொண்டு. அனைத்து துறையிலும் சாதிக்க வேண்டும்.மாணவர்களின் சாதனைக்கு நம்முடைய அரசு உறுதுணையாக இருக்கு என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி , தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது, 1950 க்கு பிறகு கல்வியில் நாம் செய்த முதலீடுகள் தான் காரனம் என்றார். சமமான, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி வேண்டும்.

இதையும் படிக்க  டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்க Canva மற்றும் CBSE கூட்டாண்மை
WhatsApp Image 2024 09 06 at 7.00.18 PM 2 - தொடுவானம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி...

அந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் அனைத்து திட்டங்களும் உள்ளன என்றார். மற்ற மாநிலங்கள் உடன் இல்லாமல் மற்ற நாடுகளுடன் போட்டி போட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய அமைச்சர் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, தொடுவானம் என்பது உயர் கல்வி செல்லக்கூடிய மாணவர்களுக்கு மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும். 3 வருடத்தில் நல்ல வளர்ச்சி அளித்து வருகிறோம். ஆதிதிராவிடர் நலத்துறை கல்வி, பொருளாதார முன்னேற்றம் கொடுக்கும் துறையாக உள்ளது. உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரியில் ஆய்வு செய்யும் போது மாணவர்கள் தேவைகள் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்று 750 மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நல்ல படித்து வேலைக்கு செல்வது தான் பெற்றோரின் லட்சியமாக இருக்கிறது. அதனை நிறைவேற்றும் துறையாக ஆதிதிராவிடர் துறை உள்ளது. மேல்படிப்பு வெளிநாட்டு படிக்க ரூ.36 லட்சம் கிடைக்கிறது. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம். 34 மாணவர்கள் கடந்த ஆண்டு வெளிநாடு சென்றுள்ளனர்.‌பிஎச்டி செய்யும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என்பது ஒரு லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க  10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு

இதனால், பிஎச்டி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க அரசு தயார் நிலையில் இருக்கிறது. அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தாட்கோ மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டும். தொழில் துவங்கவும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் எஸ்சி எஸ்டிக்கான தொழில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. துறை சார்ந்த கட்டிடங்கள் கட்ட தாட்கோவில் ஒப்பந்ததாரர்களாக வர முடியும். இந்த துறையில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. போட்டிகள் அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மொபைல் போன் பயன்பாட்டை மாணவர்கள் குறைத்து கொள்ள வேண்டும். கலைஞர் மூலம் கொண்டு வரப்பட்ட இத்துறை 51-வது வருடத்தை எட்டியுள்ளது. தாட்கோ திட்டம், பயிற்சிகள் குறித்து தாட்கோ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts