மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான நுழைவுத் தோ்வு (CUET-UG) நாடு முழுவதும் இன்று காலை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
டெல்லியில் தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், இன்று நடைபெறவிருந்த வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் மே 29ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவத்துள்ளது.
மேலும், மே 16 முதல் 18 வரை நடைபெறும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளும் வழக்கம்போல் அறிவிக்கப்பட்ட நாள்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் இன்றுமுதல் தோ்வு நடைபெறுகிறது.