எமிஸ் செயலி பணிகளுக்காக மேலும் 1,800 பேர் நியமனம்…

image editor output image 1457578474 1728276821192 - எமிஸ் செயலி பணிகளுக்காக மேலும் 1,800 பேர் நியமனம்...

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவு செய்வதற்காக மேலும் 1,800 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறினார்.

தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பெரம்பலூரில் நடந்த நிகழ்ச்சியில், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, 10-ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் கவனத்தில் கொண்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மாணவர்களிடையே தலைமைப் பண்பு வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் 5 விதமான மன்றங்களை பள்ளிகளில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இதன் மூலம், மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு, மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படும்.

இதையும் படிக்க  சில படிப்புகளுக்கு கட்டணத்தை  உயர்த்திய ஐஐடி மெட்ராஸ்

திருச்சி மாவட்டத்தில் எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவேற்றத்திற்காக 149 பேரை நியமித்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 1,800 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதால், ஆசிரியர்களுக்கு தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணிச்சுமை குறையும் எனவும் தெரிவித்தார்.

அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இருந்தால், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *