Thursday, February 13

பழனி மலைக் கோயில் ரோப் கார் சேவை 40 நாட்கள் நிறுத்தம்…

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (அக். 7) முதல் 40 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

பழனி மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், ரோப் கார் போன்ற வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மலை உச்சியை 2 நிமிடங்களில் அடையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் சேவைக்கு பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

வருடத்திற்கு ஒரு மாதம் பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, இவ்வாண்டு பராமரிப்புப் பணிகள் 40 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இதற்கிடையில், கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக தகவல் மையம் மற்றும் முதலுதவி மையம் நேற்று (அக். 6) திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *