இந்த ஆண்டு (2024-25) மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது. படிப்புக்கான விண்ணப்பத்தினை நிறுவன www.ulakaththamizh.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.சேர்க்கைக் கட்டணம் – ரூ.3200
கல்வி தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தில் வாட்ஸ்அப் எண் குறிப்பிடப்பட வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள் 5.4.2024 ஆகும்.
எழுத்துத் தேர்வு 12.4.2024 (வெள்ளிக் கிழமை) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.
மேலும் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Leave a Reply