லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.
அதை தொடர்ந்து கைதி- 2 எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வந்த அண்மை தகவல்கள்படி லோகேஷ் கனகராஜ் LCU வை மையமாக வைத்து 15- 20 நிமிட நேரத்திற்கு ஒரு குறும்படம் இயக்க இருக்கிறார்.
அதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார். குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், கமல் மற்றும் சூர்யா நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால் இந்த குறும்படம் கைதி – 2 படத்திற்கு முன்னே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.