“திருச்சியில் ‘வேட்டையன்’ படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்!”

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமான “வேட்டையன்” இன்று திருச்சியில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கிய இப்படம், ரஜினிகாந்தின் சமீபத்திய வெற்றிப் படம் “ஜெயிலர்” படத்தைத் தொடர்ந்து வந்துள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

இந்த படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார், இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மேலும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரையுலகில் நடித்துள்ளார். படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் துசாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

img 20241010 wa00356229694675551611006 - "திருச்சியில் 'வேட்டையன்' படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்!"

இன்று திருச்சியில் உள்ள எல்.ஏ திரையரங்கில் “வேட்டையன்” திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ரசிகர்கள் பெருமளவில் வந்தனர். திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றத்தின் துணை தலைவர் சுதர்சன் மற்றும் மாவட்ட செயலாளர் கலீல் தலைமையில், ரசிகர்கள் ரஜினியின் போஸ்டருக்கு ஒரு டன் மலர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூவி, வெடிகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ரஜினிகாந்த் உடல் நலமாக நீண்ட நாள் வாழவேண்டும் என பிரார்த்தித்தனர்.

இதையும் படிக்க  17 வது திருமண நாளை கொண்டாடிய பிரபல ஜோடி!
img 20241010 wa0033335806194589287184 - "திருச்சியில் 'வேட்டையன்' படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி போராட்டம்

Thu Oct 10 , 2024
திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்பாக, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் நகர செயலாளர் லோகுநாதன், கூடலூர் நகர செயலாளர் குறுத்தச்சலம், கூடலூர் நகர தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட […]
IMG 20241010 WA0030 - திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி போராட்டம்

You May Like