விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையை சேர்ந்த பாலச்சந்தர் வித்யாசமான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும் என்று எண்ணி அலைபேசி மற்றும் மொபைல் மேக்ரோ லென்ஸ் எனப்படும் மேக்ரோ லென்ஸயை பயன் படுத்தி எடுத்த புகைப்படங்கள் முதலில் கணினி டெஸ்க்டாப் இல் விநாயகர் புகைப்படத்தை மிகவும் உயர்ந்த தளத்தில் பதிவிறக்கம் செய்து பின்பு ஊசி போடும் சிரஞ்சை எடுத்து கொள்ள வேண்டும் அந்த சிரஞ்சில் சிறி தளவு தண்ணீரை நிரப்பி கொள்ள வேண்டும் .
சிறிய எடை தாங்கும் பொருளை எடுத்து கொள்ள வேண்டும் பிறகு அந்த கணினி மானிட்டரில் தெரியும் விநாயகரை பெரிதாக்கி கொள்ள வேண்டும் பிறகு அந்த சிரஞ்சில் உள்ள தண்ணீர் வெளியே சிறு துளியாக வர மேலே அழுத்தம் கொடுக்க வேண்டும் இப்படி நாம் அழுத்தம் கொடுக்கும் போது ஒரு சின்ன வட்ட வடிவில் துளி வெளிப்படும் அப்பொழுது அந்த சிரஞ்சை டெஸ்க்டாப் பக்கத்தில் சிறிய எடை தாங்கும் பொருள் மீது வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு நமது அலைபேசியில் மொபைல் மேக்ரோ லென்சினை பொருத்தி கொள்ள வேண்டும் இப்போது அந்த மேக்ரோ லென்சினை அந்த சிரஞ்சில் இருந்து வெளியே வரும் நீர் துள்ளிக்குள் கொண்டு செல்ல செல்ல மானிட்டரில் உள்ள விநாயகர் அந்த நீர் துளிக்குள் வட்ட வடிவில் அழகாய் தோன்றுவர்.