Sunday, April 27

முதல் முறையாக ‘ராமேட் இந்தியா 2024’ பேப்பர் மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி”

இந்தியாவில் முதன்முறையாக ராமேட் இந்தியா 2024 கூரையின் கீழ் பேப்பர் மட்டும் பேக்கேஜிங் கண்காட்சி நடைபெற உள்ளது..!

கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் 10″ம் தேதி முதல் 12″ம் தேதி வரை “3P” Expo”வின் ராமேட் இந்தியா 2024 இந்தியாவில் முதல்முறையாக மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

முதல் முறையாக 'ராமேட் இந்தியா 2024' பேப்பர் மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி"

இந்தியாவில் முதல்முறையாக கூரையின் கீழ் பேப்பர் மட்டும் பேக்கேஜிங் குறித்த கண்காட்சியில் இயந்திரங்களின் செயல்முறை விளக்கம் அளிக்கின்றனர்.

அதற்கான போஸ்டர் வெளியீட்டு விழாவில் “3P Expo” தலைவர் ஜெகதீசன்,கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ராமேட் இந்தியா 2024 கண்காட்சி சிறப்பு அம்சங்கள் லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் துறை சார்ந்த அரங்குகள்,தொழில் அமைப்புகள் பிரதிநிதிகள்,55 அரங்குகள்,20″க்கு மேற்பட்ட நேரடி உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் இந்த கண்காட்சியின் மூலம் 150″கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் 50″க்கு மேற்பட்ட நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்கள் குறித்த தொழில்நுட்பங்களை எடுத்து உரைகின்றனர்.

இதையும் படிக்க  SIP திட்டத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ₹46 லட்சம் வருமானம்

தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கோவா,ஹரியானா,கர்நாடகா,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும் இதில் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *