புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்காவில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஒரு விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் சேதுபதி, வெள்ளை கோட் அணிந்து காரில் இருந்து இறங்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பின் நடுவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை விஜய் சேதுபதி சந்தித்தார். தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, புதுச்சேரியில் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் இன்று மரியாதை நிமித்தமாக, ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து, உரையாடினார் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Leave a Reply