புதுச்சேரியில் நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பு…

புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்காவில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஒரு விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் சேதுபதி, வெள்ளை கோட் அணிந்து காரில் இருந்து இறங்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பின் நடுவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை விஜய் சேதுபதி சந்தித்தார். தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, புதுச்சேரியில் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் இன்று மரியாதை நிமித்தமாக, ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து, உரையாடினார் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  ஐபிஎல்:சட்டவிரோத வழக்கில் தமன்னாவுக்கு சமன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதுச்சேரியில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Wed Aug 28 , 2024
புதுச்சேரியில் மனைவி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு. புதுச்சேரி முத்திரையர்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு (55). பால் வியாபாரி. இவரது மனைவி ரதிகலா (45) தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் பாபு மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், […]
image editor output image 126964580 1724837997673 | புதுச்சேரியில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை