ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. குவியும் பாராட்டு!

கேரள மாநிலம் கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் பரூக் – ஷைலா தம்பதி. இவர்களுக்கு 25 வயதில் லைஜு என்ற மகன் உள்ளார். மாற்றுத்திறனாளியான லைஜு, சிறுவயதிலிருந்தே திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் நாயகனாக நடிக்கும் விஜய், படப்பிடிப்புக்காக கேரளா சென்றார். இதையறிந்த லைஜு, நடிகர் விஜய்யை பார்க்க விரும்பினார். ஆனால் படப்பிடிப்பில் அவரை காணவில்லை. பின்னர் அவரது நண்பர் அருண்லால் லைஜின் விருப்பத்தை நடிகர் விஜய்க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

இதை அறிந்த விஜய், லைஜூவை சந்திப்பதாக பதிலளித்துள்ளார். அதன்படி, தான் தங்கியிருந்த ஓட்டல் லாபியில் லைஜாவை சந்தித்தார் விஜய். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய், லைஜூவின் குடும்பம் மற்றும் கல்வி குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் விஜய் தனது மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க  தமிழ் புத்தாண்டை  கொண்டாடிய  விக்னேஷ் சிவன் நயன்தாரா.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனித உடலில் பன்றின் சிறுநீரகம் முதன் முதலாக பொருத்தப்பட்டுள்ளது.

Sat Mar 23 , 2024
மருத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல் கல் ஆக, அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையில், மருத்துவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றின் சிறுநீரகத்தை ரிக்கி ஸ்லேமன் என்ற உயிருள்ள மனிதருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர். 62 வயதான ரிக்கி ஸ்லேமனுக்கு இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நன்றாக குணமடைந்து வருகிறார், மேலும் விரைவில் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் […]
IMG 20240323 172123 | மனித உடலில் பன்றின் சிறுநீரகம் முதன் முதலாக பொருத்தப்பட்டுள்ளது.