
மருத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல் கல் ஆக, அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையில், மருத்துவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றின் சிறுநீரகத்தை ரிக்கி ஸ்லேமன் என்ற உயிருள்ள மனிதருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.
62 வயதான ரிக்கி ஸ்லேமனுக்கு இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நன்றாக குணமடைந்து வருகிறார், மேலும் விரைவில் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.