திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன் போது, காவல் துறை சார்பில் 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டதால், அந்த இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விளக்கத்தில், வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால், அதை பரிசீலிக்க தயாராக உள்ளதாக காவல்துறை […]

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கல்லூரியில் நடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் சிலர் தங்களுக்குத் தரும் பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்தனர். அவர்கள் கூறியபடி, சில பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் WhatsApp மூலம் ஆபாசக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியதோடு, வகுப்பறையில் நெருக்கமாக இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். […]

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான நிகழ்வுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பான கூட்டம் தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் நடத்தப்படவுள்ளது. காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கலை மற்றும் அறிவியியல், பொறியியல், மேலாண்மை, சட்டம், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அனைத்து தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் […]

பொள்ளாச்சி அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழுவின் ஐந்தாவது அரங்கேற்ற விழா நடந்தது. இந்த விழாவில், வள்ளிக்கும்மி நடன நிகழ்ச்சியில் பங்கேற்க, கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொலவம் பாளையம், ஒத்தக்கால் மண்டபம், பிரிமியர் மில், கல்லாபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் நடனக் கலையில் திறமையை வெளிப்படுத்தினர். தேர்ச்சி பெற்ற இந்த நடன […]

கோவை நியூ சித்தாபுதூரில் உள்ள பேபியமா கிளினிக்கில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இலவச நிகழ்ச்சியில், தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, மகப்பேறு மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தளிர் நிறுவனத்தின் பிறப்பு கல்வியாளர் மற்றும் பாலூட்டல் ஆலோசகர் ஹரிதா, அச்சின்தியா கர்ப்ப கவனிப்பு நிறுவனத்தின் ராஜேஸ்வரி செந்தில், குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் காயத்ரி, பேபியமா […]

கோவையில் மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் இன்று காலை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, பள்ளியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது. இதில், கோவையின் 25-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவை, பள்ளியின் முன்னாள் முதல்வர் அருட்திரு ஏ.எல். சுந்தர் ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களின் […]

கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் இன்று காலை கணுவாய் தடுப்பணை மேற்கு பகுதியில் தொடங்கியது. கோவை மேற்கு மலைத்தொடர்கள் தடாகம் பகுதியில் உள்ள, சுமார் 14 ஏக்கர் பரப்பளவுள்ள கணுவாய் தடுப்பணையை சீரமைத்து பராமரிக்கும் முயற்சியின் முதல் கட்டமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மரக்கன்றுகள் வைத்து பணிகளை துவங்கினார்கள். கணுவாய் தடுப்பணை, சங்கனூர் நதியின் இடையே நீர்வளத்துறை […]

உடுமலை தீபாலப்பட்டி பகுதி சேர்ந்த பாலாஜி (வயது 28) ,இவரது உறவினர் ஒருவரை கோவையில் உள்ள விமான நிலையத்தில்  காரில் சென்று இறக்கிவிட்டு மீண்டும் தீபாலப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார், அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள தாமரைக்குளம் பகுதி தேசிய நெடுஞ்சாலை வந்து கொண்டிருந்தபோது சாலையின் இடது புறமாக எதிரே  வந்த இரு சக்கர வாகனம் மீது பாலாஜி ஓட்டி வந்த கார் மோதியது, இதில் கார் நிலை தடுமாறி தேசிய […]

பொள்ளாச்சியில், மாதாந்திரமாக நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், விவசாயிகளின் விவசாயம் தொடர்பான குறைகளை சீர்செய்யும் முக்கிய நிகழ்வாக உள்ளது. இதற்காக, மாதம் தோறும் விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை ஆட்சியரிடம் முன்வைக்க வாய்ப்பு பெறுகின்றனர். இந்த கூட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு எதிர்காலத்திற்கான தீர்வுகளை வழங்குவதுடன், நமது நிலத்தின்மீது எவ்வாறு சிறந்த பயிர்ச்செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்பதிலும் வழிகாட்டப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கு ஒதுக்கப்பட்ட விவசாயிகள் குறை […]

கோவை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கான பல்வேறு திறமைகளைக் கணிசமாக வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்விழாவில் மாணவர்கள் தங்களது படைப்புத்திறனையும், கலைநயத்தையும் பறைசாற்றும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களை செதுக்குதல் போன்ற போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பழங்களை செதுக்கி, மாணவர்கள் சுவாரஸ்யமான உருவங்களை உருவாக்கினர். ஒரு […]