அதிமுக பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி, புதுச்சேரி மாநில மக்கள் மீது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வை கண்டித்து, என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசைச் சாடி, உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாகத் திரும்ப பெற வலியுறுத்தி, அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. […]

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் M. முகமது செரீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வரும் 19.09.2024 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்கும் முப்பெரும் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் அவை […]

இந்தியாவின் முன்னணி மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ், இன்று கோவை, தமிழ்நாட்டில் தனது புதிய காட்சியகத்தை திறந்து வைத்தது. பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இந்திய சந்தைக்கு பொருத்தமான வகையில் வழங்கி வரும் க்ரீவ்ஸ், இந்த புதிய காட்சியகத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடன் தன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. க்ரீவ்ஸ், எலக்ட்ரிக், சிஎன்ஜி, மற்றும் டீசல் என மூன்று வகையான எரிபொருள் விருப்பங்களுடன் வாகனங்களை வழங்குகிறது, இதன்மூலம் வாடிக்கையாளர்களின் […]

தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி நகர திமுக சார்பில் மத்திய அண்ணா பேருந்து நிலையம் முன் அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், நகர மன்ற தலைவர் சியாமளா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி […]

பொள்ளாச்சியில், குடும்ப நிலை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்கள் மீண்டும் உயர்கல்வியை தொடர விரும்பினால், சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்துங்கள் என்று நகரமன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரின் “நான் முதல்வன்” உயர்கல்வி வழிகாட்டல் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலும் வரும் திங்கட்கிழமை (16.09.2024) பொள்ளாச்சி மகாலிங்கம் […]

மது போதை, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளிலிருந்து மக்களை காப்போம் என்ற தலைப்பில், ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மகளிர் அணியின் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திருச்சியில் நடைபெற்றது. ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பு, ஒழுக்கமே சுதந்திரம் என்ற மையக்கருத்தின் கீழ், செப்டம்பர் […]

திருச்சியில், போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மஹாலில், திருச்சி மாவட்ட தலைவரும், மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபருமான ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் மற்றும் கிளைச் செயலாளர் அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினர், மேலும் சமுதாயப் போராளி தேக்கமலை கோரிக்கைகள் குறித்து விளக்கமாக உரையாற்றினார். இந்நிகழ்வில், மாவட்ட துணைத் தலைவர் ராஜ், மாவட்ட […]

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியராக அறிவிக்கப் பெற்று, கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு ரூ. 26,000 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 21,000 வழங்க வேண்டும். மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ. […]

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவை சுந்தராபுரத்தில் செயல்படும் அபிராமி செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து பூக்களால் கோலம் வரைந்து ஓனம் பண்டிகையை  கொண்டாடினர்.விழாவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி  செவிலியர் கல்லூரியை சேர்ந்த ஆசிரியைகள் இளநிலை நிர்வாக அலுவலர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்கள் […]

ஆனைமலை அருகேயுள்ள நா.மூ. சுங்கம் ராமு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து, சண்டை மேளங்கள் முழங்க நடனமாடி, ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் மலையாள மக்கள் பெருமையுடன் கொண்டாடும் ஓணம் பண்டிகை, அஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. மகாபலி மன்னர் திருவோண நாளில் மக்களை வருகை தந்து, அவர்களின் நலன்களை பார்வையிடுவதாக […]