Sunday, December 22

புதுச்சேரி

புதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

புதுச்சேரியில் போலீசாரின் அதிரடி சோதனை: 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

புதுச்சேரி
புதுச்சேரியில், குற்றப்பதிவேடு ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில், போலீசாரின் குழுக்கள் காலையில் அதிரடி சோதனை நடத்தின. இந்த சோதனை, ஆப்ரேஷன் திரிசூல் என்ற பெயரில், புதுச்சேரி முழுவதும் ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, சந்தேகப்படும் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சோதனையில், வீட்டில் மறைந்து இருக்கும் தடை செய்யப்பட்டவர்கள், பயங்கர ஆய்தங்கள், வெடிகுண்டுகள் மற்றும் போதைப் பொருட்கள் இருப்பதா என்பதனைப் பற்றிய தீவிர சோதனை செய்யப்பட்டது. குடும்பத்தினரிடமும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் முன் தகவல் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்....
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுச்சேரி
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகிய இருவரையும், இன்று நீதிமன்றத்தில் போலீசார் முதல் முறையாக ஆஜர் செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்காக, கருணாஸ் மற்றும் விவேகானந்தன் இருவரையும் இன்று புதுச்சேரி போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி வழக்குரைஞர்கள் செயல்பட்டதால், குற்றவாளிகளை நேரில் விசாரணைக்கு ஆஜர் செய்ய தாமதம் ஏற்பட்டது. அதிகாரிகள், அரசின் சார்பில் கொலையாளிகளுக்கு வழக்கறிஞர் நியமித்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இன்று முதல் முறையாக நீதிமன்ற...
புதுச்சேரியில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

புதுச்சேரியில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

புதுச்சேரி
புதுச்சேரியில் மனைவி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு. புதுச்சேரி முத்திரையர்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு (55). பால் வியாபாரி. இவரது மனைவி ரதிகலா (45) தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் பாபு மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 26.5.2021 அன்று கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதில் பாபு மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த மூன்று வருடங்களாக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெ...
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது…

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது…

புதுச்சேரி
புதுச்சேரியில் ஜூன் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி, முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 என இருந்த கட்டணம் ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. மின்துறையின் வரவு செலவு கணக்குகள் இணை ஒழுங்கு மின்சார ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களுடன் ஆலோசித்து கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. அதன்படி, முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.2.25 இருந்தது, தற்போது ரூ.2.70 ஆக உயர்ந்துள்ளது. 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 இருந்தது, ரூ.4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 இருந்து ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு கட்டணம் ரூ.6.80 இருந்தது, ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 65 பைசா முதல் ...
மின்கட்டண உயர்வை எதிர்த்து புதுச்சேரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

மின்கட்டண உயர்வை எதிர்த்து புதுச்சேரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

புதுச்சேரி
புதுச்சேரியில் அமலுக்கு வந்துள்ள மின்கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி, 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்ட பின், வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான மின்கட்டணத்தை உயர்த்தி, கடந்த ஜூன் மாதத்தில் அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை அமல்படுத்தவில்லை. அதனால், கடந்த ஜூன் 16 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என மின்துறை அறிவித்தது. மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், சோனாம்பாளையம் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசுக்கு எதிராக குர...
புதுச்சேரியில் சர்வதேச காற்றாடி திருவிழா

புதுச்சேரியில் சர்வதேச காற்றாடி திருவிழா

புதுச்சேரி
புதுச்சேரி வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, புதுவையில் நீல நிறக்கொடி சான்று பெற்ற அழகிய கடற்கரை ஆகும். இந்தக் கடற்கரையில் வரும் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறவுள்ளது. இந்த 3 நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை வரை காற்றாடி திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவுக்கான முன்பதிவு பட்டத்திருவிழா இணையதளத்தில் ஆன்லைனில் மேற்கொள்ளலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். குறைந்தபட்சம் 6 அடி முதல் 19 அடி உயரம் வரை உள்ள 120 ராட்சத காற்றாடிகள் பறக்கவிடப்படும். புதுவையில் சர்வதேச அளவில் முதன்முறையாக பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள காற்றாடி திருவிழா இது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை, 12 வயதுக்கு...
ஜிப்மர் மருத்துவமனையில் நேரம் மாற்றம்…

ஜிப்மர் மருத்துவமனையில் நேரம் மாற்றம்…

புதுச்சேரி
ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களின் காரணமாக, ஜிப்மரில் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையை முன்னிட்டு, இன்று (திங்கட்கிழமை) முதல் போராட்டங்கள் முடிவடையும் வரை, ஜிப்மரில் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே செயல்படும். வழக்கமாக இந்த சேவை காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை இயங்குவது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசிய சிகிச்சை தேவையில்லாத நோயாளிகள், இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மருத்துவர்கள் தற்போது அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கே முக்கியத்துவம் அளிக்க முடியும். போராட்டம் முடிந்ததும், வெளிப்புற நோயாளி பிரிவு சேவைகள்...
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி

புதுச்சேரி
புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்ட கைலாஷ்நாதன், குஜராத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்து, சூரிய மின் உற்பத்தியில் மாநிலத்தை முன்னணி நிலைக்கு கொண்டு வந்த அனுபவமுடையவர். அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த முன்னெடுப்பின் மூலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய மின் சக்தி பயன்பாட்டை அதிகரிக்க செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது....
ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டம்…

ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டம்…

புதுச்சேரி
கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 13) 2 மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, ஜிப்மர் மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அவசரமாக அமல்படுத்த வேண்டும், பெண் மருத்துவர் படுகொலையைப் பற்றிய விசாரணை திறந்தவெளியில் நடத்தப்பட வேண்டும், தவறுக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், மற்றும் மருத்துவர்களுக்கு பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க ம...
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

புதுச்சேரி
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, தற்போது மழையாக மாறியுள்ளது. வியாழக்கிழமை இரவு தொடங்கி, வெள்ளிக்கிழமையும் (ஆகஸ்ட் 10) தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மழையின் தாக்கம் காரணமாக, புதுச்சேரி நகரின் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுள்ளது. ஏஎப்டி மைதான தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் குளங்கள் போல தண்ணீர் தேங்கியுள்ளது. புஸ்சி வீதி, அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, சாரம், லாஸ்பேட்டை, வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர், பூமியான் பேட்டை, ஜவகர் நகர் ஆகிய நகரப் பகுதிகள் அனைத்தும் மழை நீரில் சூழப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், வானிலை ஆய்வு மையம் புதுச்சேரியில் மிக கன மழை பெய்யும் ...