
நம் அரசியல் சட்டம் உலக நாடுகளை வியக்க வைக்கிறது – பா.ஜ.க தேசிய செயலாளர் பெருமிதம்!!!
கோவையில் பா.ஜ.க சார்பில் அரசியல் அமைப்பு சட்ட கவுரவ இயக்கம் சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பா.ஜ.க தேசிய செயலாளர் அனில் ஆண்டனி பேசும்போது:"நம் நாட்டின் அரசியல் சாசனமும் சட்டமும் அற்புதமான மற்றும் நெகிழ்ச்சியுடன் செயல்படும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இது ஏழை, அடித்தட்டு மக்களுக்கு முழு உரிமையை வழங்குகிறது மற்றும் வலிமையான இறையான்மையை கொண்டுள்ளது. நம் நாட்டின் அரசியல் உலக நாடுகளை வியக்க வைக்கின்றது. மக்களாட்சியின் கோட்பாட்டின் படி ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இந்தப் பொருட்டு, நம் நாட்டின் அரசியல் சட்டத்தை நாம் பாதுகாக்கின்றோம். இதனாலே, லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் மத்தியில் காங்கிரஸ் கட்சி அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, பல மாநில அரசுகளை 90 முறை கலைத்து கவர்னரின் கட்டுப்பாட்டில் மாநில ஆட்சிகளை கொண்டு வந்தனர். இது தான் காங்கிரஸ் கட்சியின் சாத...