
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர்தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர்தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் தொட்டியம், ஏலூர்பட்டி, காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் திறந்த வேனில் சுற்றுப்பயணம் செய்து தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்…கடந்த தேர்தலில் என்னை வெற்றிபெற செய்தீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றி உள்ளேன். அரியலூர்-பெரம்பலூர்- துறையூர் வழியாக நாமக்கல் வரை ரெயில்வே திட்டத்தை கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டுள்ளேன். மீண்டும் என்னை தேர்வு செய்தால் நிச்சயமாக இந்த ரெயில்வே திட்டத்தை நிறைவேற்றுவேன்.தொட்டியம் தாலுகாவில் உள்ள முள்ளிப்பாடி ஏரிக்கு காவிரி ஆற்றில்இருந்து நிரந்தரமாக தண்ணீர் கொண்டு ...