Sunday, April 20

அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம்!

அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரச்சாரம்!

நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக நடிகை விந்தியா நேற்று திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிக்க  கும்பமேளா அரசியலுக்கு பயன்படுத்துவது தவறு, விஐபி முன்னுரிமையை ஆதரிக்கும்:கார்த்திக் ப சிதம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *