மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும் தென்னை சார் தொழில்களை வளரவும் ஏற்றுமதியை வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும் சென்னையில் உள்ள மண்டல தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை பொள்ளாச்சியில் அமைத்திட வேண்டும் தென்னையைத் தாக்கும் ஈரோ பைய்டு கருந்தாழை புழுக்கள் வேர்ப்புழு வெள்ளை ஈ கேரளா மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய்களை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு நோய்களை கட்டுப்படுத்தகூடிய மருந்துகளையும் வழங்கிட வேண்டும்.
முழுமையான பயிர் காப்பீடு அனைத்து தென்னை மரங்களுக்கும் அமுல்படுத்த வேண்டும் செயல்படாத காயர் போர்டின் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் முழக்கமிட்டனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி மாவட்ட தலைவர் வி.பி. இளங்கோவன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ஏ.காளப்பன் மற்றும் ரமேஷ் பாண்டி உட்பட தென்னை விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.