மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால், இந்த இடங்கள் வனத்தை ஒட்டி இருப்பதால் காட்டு யானைகள் மூலம் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. யானைகளை கட்டுப்படுத்த யானை தடுப்பு அகழி மற்றும் சோலார் மின் வேலி போன்ற முறைகள் முயற்சிக்கப்பட்டாலும், அவை முழுமையான தீர்வாக இல்லாதது குறிப்பிடத்தக்கது.
அதனால், கெம்மராம்பாளையம் ஊராட்சியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தி, 500 மீட்டர் தொலைவிற்குள் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா, ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் ஒலிபெருக்கிகளை ஒருங்கிணைத்து, யானைகளை வனத்திற்குள் திருப்பி அனுப்ப முயற்சிக்கப்படுகிறது. இந்த சோதனை முயற்சியால், வனவிலங்குகள் வெளியில் வரும் சம்பவங்கள் குறைந்துள்ளன, மற்றும் இந்த நவீன தொழில்நுட்பம் வெற்றி அடைந்தால் மற்ற பகுதிகளிலும் இதை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Leave a Reply