விழுப்புரத்தில் நடைபெற்று வரும் இயற்கை விதை திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் மற்றும் அரிசி ரகங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டனர்.
பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் சார்பில் இந்த பாரம்பரிய விதை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், காய்கறி, கீரை வகைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட அரிசி வகைகளை உள்ளடக்கிய விவசாய கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு வைத்தனர். குறிப்பாக, முருங்கை இலையை மையமாகக் கொண்டு முருங்கை சூப் பொடி, முருங்கை லட்டு, நாவல் பழ சூப் பவுடர், மற்றும் தேங்காய் ஓலையில் தயாரிக்கப்பட்ட குளிர்பான ஸ்ட்ரா போன்ற பல பொருட்கள் விற்பனைக்காக காட்சியில் இடம்பெற்றன.
மேலும், இவ்விழாவிற்கு வருகை புரிந்த பொதுமக்கள் பாரம்பரிய விதைகள் மற்றும் விவசாயப் பொருட்களை ஆர்வமாக பார்வையிட்டு, தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர்.
Leave a Reply