Thursday, December 26

ஆழியாறு அணையில் இருந்து1,006 கன அடி தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது அணையில் இருப்பு வைக்கப்படும் தண்ணீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது அணையின் மொத்த உயரமான 120 அடியில் இன்று காலை 7:00 மணி நிலவரப்படி 119.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 722 கன அடி நீர் வரத்தாக உள்ளது

தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆழியாறு அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக 332 கன அடி நீரும் ஆற்றின் வழியாக 660 கன அடி உபரி நீரும்
அணையிலிருந்து வினாடிக்கு 1,006 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆழியாறு நீர் வழிப்பாதையில் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் 30 அடி உயர மகிஷாசூரன் சிலையுடன் நவராத்திரி விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *