தமிழகத்தில் உள்ள இந்து கோயி்ல்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவல் அருகே இன்று இந்து முன்னணி அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை, ஸ்ரீரங்கம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
அப்போது இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளும், கடும் வாக்குவாதமும் ஏற்பட்டதால் பரபரப்பானது.