Friday, December 27

குவைத் தீ விபத்து…….

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜுன் 13) ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் இந்தியாவை சார்ந்த 42 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து வந்த நிலையில்,6-ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 49 பேர் பலியாகினர். இதில், 42 பேர் இந்தியர்கள் ஆவர்.மேலும், விபத்தில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் 20 முதல் 50 வயது வரையிலான இந்தியா்கள் என்றும் அவா்கள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவைச் சோ்ந்தவா்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், தனதுX தளத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் எண்களை இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 தொடர்பு கொள்ளவும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை +965-65505246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிக்க  குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *