இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தின் 2ஆம் பாகம் தற்போது படப்பிடிப்பு நடைப்பெற்று வருகின்றது.இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகை பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியன் தாத்தாவான கமல்ஹாசன் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக கையில் வாக்களித்த அடையாள மையுடன் இருக்கிறார். இந்தியன் – 2 ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.