தமிழகத்தில் கோடை காலத்திலும் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,தேசிய டெங்கு ஒழிப்பு தினம் மே 16-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் உருவாகும் டெங்கு பாதிப்பு பருவ மழைக் காலத்தின்போதும், அதன் பின்னரும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக திருப்பூா், கோவை, தேனி, நாமக்கல், மதுரை, அரியலூா், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூா் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதேபோல், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், மருத்துவக் கருவிகள் போதிய அளவில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம்.டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நேரடி கள ஆய்வு நடத்தவும், நோய்ப் பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.