
10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவர்கள், இன்று முதல் துணைத் தோ்வெழுத விண்ணப்பிக்கலாம்என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது . பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியானது. தோ்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2 தேதி முதல் துணைத் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.