பொள்ளாச்சியில் வாசவி இன்டர்நேஷனல் கிளப் சார்பில் 1 கோடி விதை பந்துகள் தயாரிப்பு விழிப்புணர்வு.
பொள்ளாச்சியில் வாசவி இன்டர்நேஷனல் கிளப்பின் உறுப்பினர்கள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில், சுமார் 1 கோடி விதை பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போதைய கால சூழ்நிலை மற்றும் அதிக ரோடு விரிவாக்கம், வீட்டு மனைகளின் விரிவாக்கம் காரணமாக மரங்கள் பெரிதும் காயம் அடைந்துள்ளன, இதனால் வெயிலின் அளவு 102 டிகிரிகளை கடந்து விட்டது.
எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு, 1 கோடி விதை பந்துகளை உருவாக்கி, அவற்றை வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியில் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் நிலை நாட்டவுள்ளனர். இதன் மூலம் குறைந்தது 50 லட்சம் மரங்கள் வளர்கின்றன என நம்பப்படுகிறது. இதன் மூலம் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும், மக்கள் விழிப்புணர்வுக்காக பொதுமக்களிடம் மரங்களை நட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என பொள்ளாச்சி வாசவி கிளப்பின் நகரத் தலைவர் லட்சுமிபதி ராஜு தெரிவித்தார்.
இதில் செயலாளர் பரணிதரன், முருகன், மனோஜ், நாகராஜ், கண்ணன் மற்றும் ஜோதி என கிளப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.