
திருச்சி ஜங்ஷன் பாலம் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. ரூ. 138 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பழைய பாலம் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் (நகரப் பேருந்துகளை தவிர) டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து தலைமை அஞ்சலகம், கண்டோன்மென்ட், வெஸ்ட்ரி ரவுண்டானா, ஆட்சியரகம், மிளகுப்பாறை வழியாக செல்ல வேண்டும். மறுமுகத்தில் குரு உணவகம், முத்தரையார் சிலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக பயணம் செய்ய வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மிளகுப்பாறை, கோரிமேடு வழியாக பாலத்தின் கீழ் பகுதியை கடந்து, இணைப்புச் சாலையில் இருந்து திண்டுக்கல் சாலைக்கு சென்றிட வேண்டும். திண்டுக்கல்லிலிருந்து வரும் பேருந்துகள் கோரிமேடு, மிளகுப்பாறை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

மதுரை மாவட்டம் மற்றும் மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அரிஸ்டோ மேம்பாலம் வழியாக பாலத்தின் ரவுண்டானா வழியாகச் சென்று, ஜங்ஷன் மார்க்கமாக விலகி, முருகன் கோயில் வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் பகுதிகளிலிருந்து திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் மன்னார்புரம் வழியாக மதுரை சாலையில் சென்று, மணிகண்டத்தில் வலப்புரம் திரும்பி வண்ணாங்கோயிலை கடந்து திண்டுக்கல் சாலையில் சென்றிட வேண்டும்.
