இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், 10 பிரபல காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடி வாழ்த்து தெரிவித்தார்
சிவகங்கை மாவட்டம், சொக்காதபுரம் அருகே உள்ள கத்தப்பட்டு கிராமத்தில், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தனது பூர்வீக கிராமத்தில் மாட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். இவர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பிரபலமாக விளங்கும் 10 காளைகளுடன் இந்த பண்டிகையை அனுபவித்தார்.
செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி, தமிழகம் முழுவதும் பிரபலமான காளைகள் பலவற்றை பராமரித்து வருகிறார். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பிரபல ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற காளைகளில் பேட்ட காளி, செம்மாலு, காங்கேயம், புலி, பாகுபலி உள்ளிட்டவை அடங்கும்.
மாட்டு பொங்கல் கொண்டாட்டம் செய்யும் போதும், இந்நிலையில் அந்த காளைகளுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் தொண்டமான், பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து, பெண்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளை அவிழ்த்து விடுவது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.