Wednesday, September 10

காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரி (பெஸ்ட் மம்மி) ஒன்று, காதலர் தினத்தையொட்டி, தங்களிடம் வரும் காதல் ஜோடிகளுக்கு ரோசாப்பூ வழங்கும் சிறப்பு ஆஃபரை அறிவித்தது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில், உறுப்பினர்கள் தாலிக்கயிறுடன் பேக்கரிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார், பேக்கரி நிர்வாகத்துடன் பேசி, அவர்களின் காதலர் தின ஆஃபரை ரத்து செய்யச் செய்தனர். அதன்பிறகு, பேக்கரி நிறுவனம் தங்களது விளம்பர பலகையையும் அகற்றியது.இந்த சம்பவம் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
இதையும் படிக்க  மகளிர் உரிமை தொகை வழங்காததை எதிர்த்து சாலை மறியல் முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *