சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை கவுல்கொல்லை காளி கோயில் பின்புறம் சேவல் சண்டை நடத்துவதாக சாக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து சாக்கோட்டை காவல் துறையினர் அங்கு சென்ற பொழுது 200க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களை நின்று சேவல் சண்டை பணம் வைத்து நடத்தியது தெரியவந்தது காவல்துறையினர் வருவதைக் கண்டு அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடினர்
இதில் 1,காரைக்குடி புதுவயிலைச் சேர்ந்த அஜ்மீர் அலி 2,புதுக்கோட்டையைச் சேர்ந்த முகைதீன் பாஷா 3,காரைக்குடியைச் சேர்ந்த முத்து குமார் 4,காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரை சுற்றி வளைக்கும் பிடித்தனர் அவர்களிடமிருந்து 1200 ரூபாய் பணம் தப்பி ஓடிய பார்வையாளர்களின் 18 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து வந்தனர் சாக்கோட்டை காவல் துறையினர் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.