சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகே, காஞ்சிரங்குளம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 70 வயது முதியவர் உயிரிழப்பு. முருகன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலின் போது, ஆத்திரமடைந்த முருகனின் 18 வயது மகன் சக்தி கணேஷ், கருப்பையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, தப்பியோடிய சக்தி கணேஷை திருப்புவணம் காவல்துறையினர் 30 நிமிடங்களில் துரத்தி, அருகிலுள்ள கண்மாய் கரையோரத்தில் கைது செய்தனர்.
கருப்பையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்புவணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சக்தி கணேஷ் மீது ஏற்கனவே திருட்டு தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 70 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் குற்றவாளி விரைவாக கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.