Thursday, October 30

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி: கிறிஸ்தவ ஆயர் பங்கேற்று அன்னதானம் வழங்கினார்….

பொள்ளாச்சியில் பிரபலமான மாட்டுச்சந்தையில், மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். இன்று செவ்வாய்கிழமை என்பதால் சந்தை மிகவும் நெரிசலுடன் களை கட்டியது.

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி: கிறிஸ்தவ ஆயர் பங்கேற்று அன்னதானம் வழங்கினார்....

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாட்டு சந்தை வளாகத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை முன்வைக்கும் வகையில், நல்லூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ திருச்சபை ஆயர் விழாவில் பங்கேற்று, அன்னதானத்தைத் துவக்கி வைத்தார்.

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி: கிறிஸ்தவ ஆயர் பங்கேற்று அன்னதானம் வழங்கினார்....

மாநில மாட்டு வியாபாரிகள் சங்கம் செயலாளர் தென்றல் செல்வராஜின் ஏற்பாட்டில், சுமார் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அன்னதானமாக சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தக்காளி சாதம் ஆகிய நான்கு வகை உணவுகள் வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி: கிறிஸ்தவ ஆயர் பங்கேற்று அன்னதானம் வழங்கினார்....

நிகழ்ச்சியில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன், நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணிhttps://twitter.com/cbesouthywhttps://twitter.com/cbesouthyw துணை அமைப்பாளர் மணிமாறன், தென்றல் நகர மன்ற உறுப்பினர் பி.ஏ. செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க  தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி அருகே  முன் விரோதம்  காரணமாக  டூரிஸ்ட் வேன் உரிமையாளர் சுடு காட்டில் வெட்டி கொடூரமாக படுகொலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *