Wednesday, October 29

சிங்காநல்லூர் குளம்: ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

கோவை, சிங்காநல்லூர்: சிங்காநல்லூர் குளம் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அகற்ற கோரி, திராவிடர் விடுதலை கழகம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.

திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாநகர தலைவர் நிரமல்குமார் மற்றும் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தலைமையில், திருச்சி ரோட்டில் உள்ள சிங்காநல்லூர் படகுத்துறை அருகே பிளேக் மாரியம்மன் கோவில் விரிவாக்கம் என்ற பெயரில் அரசின் நிலத்தை ஆக்கிரமித்து புதிய கட்டிடம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்நிலம் நீர்பிடிப்பு பகுதியான குளம் என்பதால், மழைக்காலங்களில் நீர்சேமிப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும், இதனால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுமெனும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய கோவில், முறையான அனுமதி இல்லாமல் கட்டப்படுவதாகவும், இதுகுறித்து சமூகவிரோதிகள் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் விடுதலை கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

 
இதையும் படிக்க  கோவையில் உதவும் கரங்கள்: ஓட்டுநர் நண்பர்கள் மனிதநேய சேவையில் முன்னணி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *