Thursday, October 30

₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மொத்தம் 793 பயனாளிகளுக்கு ₹8.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மக்கள் தொடர்பு முகாம் பொள்ளாச்சி – பாலக்காடு ரோட்டில் உள்ள மின்னல் திருமண மண்டபத்தில், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்காக நடைபெற்றது.

₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை, வேளாண்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில்;இலவச வீட்டுமனை பட்டா,விலையில்லா சலவைப் பெட்டி,வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பேச்சுகையில் மக்கள் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் பணியாற்றி வருவதை பாராட்டினார்.இன்னும் தீர்க்கப்படாத கோரிக்கைகள் மீது அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மகளிர் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிராம மகளிர் சுயஉதவி குழுக்களின் செயல்பாடுகள் வலுவாக, வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைய அரசு துணை நிற்கும்.

இதையும் படிக்க  300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா...
₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

முகாமில் பங்கேற்ற முக்கிய தன்மைகள்:பொள்ளாச்சி தாசில்தார் மேரி வினிதா,வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மருதவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த மக்கள் தொடர்பு முகாம், பல்வேறு அரசு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் ஒரு சிறந்த முயற்சியாக அமைந்தது.

₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *