பொள்ளாச்சியில், தாளக்கரை கிராமத்திலுள்ள தனியாரின் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கும் நேபாள நாட்டைச் சேர்ந்த இருவர் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டிசிங் IPS. இந்த தகவலை பெறவுடன், போலீசார் தங்கள் தனிப்படை உதவி ஆய்வாளர் கவுதம் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது, சுமார் ஒரு கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. பின், நேபாளம் நாட்டைச் சேர்ந்த சஞ்சிப் குமார் யாதவ் மற்றும் ஸ்ரீதேவ்குமார் என்ற இரு நபர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.