Thursday, October 30

பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…        

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராத்தி குமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...        

அதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை ஸ்கேட்டிங் கிரௌண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாவட்டஆட்சித்தலைவர்ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வர் அறிவித்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரிடையாக சென்று அரசு அறிவித்த திட்டங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர் கோவை மாவட்டத்தில் தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 2000 பேர் பங்கேற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...        
பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...        

மேலும் பொள்ளாச்சி நகராட்சி குறைந்த கட்டணங்கள் வசூலித்தாலும் சிறந்த நகராட்சியாக செயல்படுகிறது தற்போது மழைக் காலங்கள் தொடங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது பொது மக்களுக்கு அறிகுறிகள் இருந்தால் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்தார் அப்போது சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் நகராட்சி ஆணையாளர் கணேசன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  கணவர் இறந்த துக்கத்தில் மனைவி குழந்தையுடன் தற்கொலை...

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *