Wednesday, February 5

10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது

பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியது. கடந்த 9 ஆண்டுகளாக தைப்பொங்கல் முதல் நாளில், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா குளோபல் பாக்ஸ் எனும் தனியார் நிறுவனம் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது

10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது

இந்த விழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து 12 பலூன்கள் அழைக்கப்பட்டுள்ளன. இந்த பலூன்கள் வெப்ப காற்றால் நிரப்பப்பட்டு, பிரத்யேக பைலெட்டுகளுடன் வானில் எழிலான தென்னை மரங்களை மெல்லப் புறந்து பொள்ளாச்சியை சுற்றி வட்டமடிக்கின்றன.

10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது

10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது

வெப்ப காற்று பலூன்கள் பொதுவாக குளிர் பிரதேசங்களில் மட்டுமே பார்க்கப்படும், ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பொள்ளாச்சியில் வெற்றிகரமாக இந்த விழா நடத்தப்படுகின்றது. இந்த 10வது சர்வதேச திருவிழாவில், பொங்கல் விடுமுறை நாட்களில் அதிகாலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பலூன்களை கண்டு ரசித்தனர்.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் பத்தாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா நாளை தொடக்கம்!
10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது

10வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *