பொள்ளாச்சியில் ரயில்வே கேட் மூடல்: MLA ஜெயராமன் தலைமையில் மறியல் போராட்டம்

பொள்ளாச்சி வடுகபாளையத்தில் சுமார் ஆயிரத்த்ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் மேலும் சுற்றுபுறத்தில் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளது இப்பகுதி மக்கள் அனைவரும் வடுகபாளையம் ரயில்வே கேட்டை கடந்து கோவை மற்றும் பொள்ளாச்சி நகரத்திற்கு சென்று வருகின்றனர் இந்நிலையில் இந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே துறையில் இருந்து அறிக்கை ஒன்றை நேற்று அதிகாரிகள் வெளியிட்டனர்.

img 20241128 wa00401750518844595982241 | பொள்ளாச்சியில் ரயில்வே கேட் மூடல்: MLA ஜெயராமன் தலைமையில் மறியல் போராட்டம்<br>

இதுகுறித்து அறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில்  அப்பகுதி மக்களுடன் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் குறித்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

img 20241128 wa00419079777988559409506 | பொள்ளாச்சியில் ரயில்வே கேட் மூடல்: MLA ஜெயராமன் தலைமையில் மறியல் போராட்டம்<br>

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிட்டும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் அறிவித்த நிலையில் ரயில்வே துறை அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார் சுமூகமான தீர்வு எட்டப்பட உள்ளதாகவும் கேட் மூடப்படாது என்று உறுதி அளித்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட்டனர். நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா அருணாச்சலம் வடுகை கனகு கிட்டான் உட்பட அதிமுக நிர்வாகிகள் திரளானோர் மறியலில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Fri Nov 29 , 2024
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்-சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் அவர்களின் மகன் ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பிய அவர், “திருப்பூர் பகுதியில் மூவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. […]
image editor output image831930616 1732861832157 | தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்