
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வோர் திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில், பாஜக நகர தலைவர் பரமுகுரு தனது நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு மனு அளித்தார்.
அதில், பொள்ளாச்சி நகராட்சி 11வது வார்டில் உள்ள மகாலிங்கபுரம், ரவுண்டானா, ஏ.எஸ்.டி.புரம், தாகூர் வீதி, திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் இல்லாத நிலையில், பசுமையாக வளரும் மரங்களை சிலர் தங்களது சொந்தலாபத்திற்காக வெட்டி அகற்றியுள்ளனர்.இதனை கண்டித்த பாஜகவினர், மரங்களை வெட்டியவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.