பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி இவர் மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் வழியாக காவல் நிலையம் செல்வதற்காக செல்லும் பொழுது கோட்டூர் வள்ளியம்மாள் தியேட்டர் அருகே எதிரே அதிவேகமாக வந்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த சிவகுமார் என்ற நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் மேலும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சிவக்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் விபத்து குறித்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு இந்த விபத்து குறித்து செய்தி அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி பணிக்கு செல்லும் பொழுது சாலை விபத்தில் பலியான சம்பவம் காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.