Sunday, April 27

பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (33), வீரமணி (33), கருப்புசாமி (29) ஆகிய மூவர், இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏழூர் பிரிவில் உள்ள பேக்கரியில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, வீரப்பகவுண்டனூர் அருகே அதிவேகமாக சென்ற போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பனை மரத்தில் மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு, தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் காயமடைந்தனர்.

உயிருக்கு போராடிய நிலையில், அவ்வழியாக வந்தவர்கள் மூவரையும் தனியார் ஆம்புலன்சில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூவரும் இறந்துள்ளதாக தெரிவித்தனர்.

இறந்த மூவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

 
இதையும் படிக்க  மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு தேவையில்லை –எம்.பி. ஈஸ்வரசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *